எனது இந்தியா

எழில் மிகு இந்தியாவே -ஏன்
உனக்கு இந்த நிலை
பல வண்ணங்களை வாரி இறைத்தாலும்
சிவப்பு வண்ணமே உன்னை வந்தடைகிறது
மூலிகை நீர் ஓடும் உன் ஆறுகளில்
ரத்த ஆறு ஓடுவது ஏன் ?
அகிம்சைக்கு பெயர் போன உன் மக்கள்
வன்முறையை நாடுவது ஏன் ?
அணைத்து மதங்களையும் நீதானே பெற்றாய் ?
அகிம்சை பிறந்துள்ள உன் வயிற்றில் தான் வன்முறை அரக்கனும் பிறந்துள்ளான் .
அணைத்து மதங்களும் உன்னிடம் தனம்மா தோன்றியது ...
அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் -பின்
ஏன் இந்த சண்டைகள் .
ஒரு நாள் உணர்வார்கள் உன்னை வந்து அடைவார்கள் ....
கலங்காதே அம்மா கருகிவிடுவோம் நாங்கள்
வருந்தாதே அம்மா வடிவிடுவோம் நாங்கள் என்று
அலறிகொண்டேழுந்தேன் -என் கனவில்
எங்கோ கேட்கிறது -என்
இந்திய தாயின் அழுகுரல்
என் மகளே கேள் என்ற சப்தம்
என் வயிற்றில் பிறந்தவர்களே இன்று -என்
தலையில் குண்டு வைக்கிறார்கள் .
மலர் பூத்து குலுங்கும் காஸ்மீர் பகுதியில்
மரண பயம் தான் இன்று விதைக்கப்படுகின்றது
நெஞ்சு பொறுக்க வில்லையே -அஞ்சி
நடக்கும் எம் பெண் பிள்ளைகளை பார்க்கும் போது
அடி வயிறு பற்றி எரிகின்றது ஆயுதம் ஏந்திய எம்
ஆண்பிள்ளைகளை பார்க்கும் போது ..
மூலிகைகள் நிறைந்த எம் நாட்டில்
மூளிகள் என்ற நிலை வரலாமா ???
எப்போதும் மாறுமோ இந்த நிலை ????