paaththiram arinthu
பாத்திரம்அறிந்து :
கதிர்களை கீழ் இறக்கி
தான் இறங்காத கதிரவன்...
துளிகளை கீழ் அனுப்பி
தரை தழுவும் மாமழை...
கடலோ சாக்கடையோ
வானில் காலியாகி
பூமி ஓடி வரும்
மழை பெரிதா?
மேகத்து மகாராஜாவாய்
கைக்கெட்டாத தூரத்தில்
என்றும் பரிபாலனை செய்யும்
சூரியன் உயர்ந்ததா?