நிச்சயம் வருவேன்
சிறிது காலம் காத்திரு
கஷ்டமோ, நஷ்டமோ
தன்னோடே வைத்து படிக்க
வைத்த தந்தை. .........
தடுக்கி விழுந்தாலே
துடிதுடித்து போகும்
அன்னை.............
குழந்தை முகம் மாறாத
தங்கை. .............
இடையில் அன்பென்ற ஆயுதம்
கொண்டு தாக்கும்
நீ
புரிகிறது உன் நிலை பெண்ணாக
பிறந்துவிட்டாய்
படிப்பறியா வீட்டில்
படித்தும் முடித்துவிட்டாய்
மாப்பிள்ளைகள் முந்தியடித்து
கொண்டிருக்கின்றனர்........
காதலை சொல்லவும் முடியாமல்
மெல்லவும் முடியாமல் நீ
தவிப்புகள் புரிகிறது
என்னவளே
ஆனால் என் நிலைமையும்
உணர்வாயா............
இன்னும் சிலகாலம் பொறு
வாங்கிய பட்டத்தோடு வீட்டின்
பத்திரத்தையும் அடகுகடை
சொந்தகாரன் பத்திரமாய்
வைத்துள்ளான்
நிச்சயம் ஓர் வேலை
கிடைக்கும் ஓர் வேளை
கிடைக்காது போனால்
என கேட்காதே
பதில் இல்லை
நம்பிக்கை கொள்
காதலி நிச்சயம்
வருவேன். ..........