விழுதுகள்

பத்து மாதம்
இருட்டு அறையில்
தலை கீழாய்....

ஜனனம் கொண்டு
அன்னையில் மடியில்
தவழ்ந்து
தந்தையின் தோளில்
கண்ணயர்ந்து
நடந்து உருண்டு
அழுது......
அனைத்தையும்
சாதித்து
பருவ வயதில்
பழகியவருடன்
பறந்தோடியது எதற்கு....

விழுதாய் மரத்தை
காக்க மறந்து
பழுதாய்
பறந்தோடியது ஏன்...

அழுது சாதித்த
உனக்கு
அழுது கொண்டிருக்கும்
அன்பு உள்ளங்கள்
கண்ணில் தெரியவில்லையா...


ஆம். விழுதுகள்
மண்ணில் ஊன்றி
விட்டால் அதுவும்
தனி மரமே....

தாய் மரம்
மறந்து விட வேண்டியதே...

பிறக்கும் முன்
தலை கீழாய்.. இறக்கும்
முன்பும் தலை கீழாய்
விழுதாய் மண் நோக்கி...

எழுதியவர் : ச.கே.murugavel (30-May-14, 6:21 pm)
சேர்த்தது : S K MURUGAVEL
Tanglish : vizhuthukal
பார்வை : 69

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே