வான் நிலவு ஒளி வீச
வட்ட வடிவான வெண்ணிலவே
இரவுக்கு ஒளி, நீ தோன்றுவதினாலே
இருளை போக்கி வெளிச்சம் தருவாயே
மேகம் மறைத்தும் நீ வெளியில் வருவாயே
மோடம் குறைந்ததும் கண்ணில் விழுவாயே
நானும் உன்னை கண்டு மகிழ்ந்திடுவேனே
நாளும் அதற்காக தவம் இருந்திடுவேனே
வேதம் போற்றும் சந்திரன் நீயே
வேள்வி காக்கும் முனிவரெல்லாமே
வணங்கி உந்தன் புகழ் பாடிடுவாறே
அதை கேட்டவர் யாவரும் அக மகிழ்ந்திடுவாரே
வளர் பிறையாக நீ இருந்திடு என்றும்
தேய் பிறை காண பிடிக்க வில்லை எனக்கும்