ஊமை தாலாட்டு

உயிரின் உருவே
உணர்வின் கருவே
இது
ஊமை தாயின் தாலாட்டு. . .

இடயை உடைச்சு
உதிரம் திரிச்சு
உன்ன நானடஞ்சேன். .
இசையே உணராத
இவளின் காதோட
இதமா சங்கீதமே கண்ணுறங்கு. . .!

பள்ளிப்பாத நீ போக
பாலையில கால் வேக
பட்டினிய செமிச்சிடுவேன்
பணிக்காத்தே பட்டுப்பூவே
பாலருந்தி பசியாறி
பக்குவமா கண்ணுறங்கு. . .!

உச்சியில கொடி நாட்ட
உலகமே கை கட்ட
ஓரமா ஓரு நிழலா நின்னிடுவேன். . .
காத்தும் கோரமா
வீசிடக்கூடாம காத்திடுவேன்
வெள்ளிமணியே கண்ணுறங்கு. . .!

நெருப்பா நீ வளர
நேர்மைக்கு பேர் வாங்க
ராசாவா நிமிந்து நின்னு
அர்சுனனா வில்லெடுக்க
ஆத்தா நான் காத்திருக்கேன்
அற்புதமே கண்ணுறங்கு. . .!

எழுதியவர் : கல்பனா ரவீந்திரக்குமார் (30-May-14, 8:55 pm)
Tanglish : uumai thaalaattu
பார்வை : 291

மேலே