பேரன் குறள்கள்- 13
யோரன் குறள்படித்து யோசித்தது..[13]
ஆயுதம் செய்து,ஏன் அழிகிறோம்?, பூமியை
மா,இதம் ஆக்க மறுத்து?------------------------------------------------------121
ஆயுதம் செய்துவரும் அவ்வளர்ச்சி தன்னிலும்
தேயுதல் நன்றெனவே தேர்!-------------------------------------------------122
அன்பே சிவமாய், அதுவே இயேசுவாய்த்
துன்பம் துடைக்கத் துணி!----------------------------------------------------123
காணும் பொருளில் கருத்தழி யாதே,நின்
நாணம் கெடாது நில்!----------------------------------------------------------124
புழுக்கம் இலாது புயல்மழை இல்லை;
ஒழுக்கம் இலாதே(து) உயர்வு?------------------------------------------125
தலையின் இழிந்த மயிரனைவாய், நீயுன்
கலையை மரபைக் களைந்து!---------------------------------------------126
நிலவளம் காக்க நினைக்கின் மனத்தின்
பலவளம் போற்றிப் பழகு!--------------------------------------------------127
நல்லவர் கொண்டுதான் நாடாமால் உன்னை,நீ
செல்லுமா றறிந்து செலுத்து!----------------------------------------------128
புலனடக்கம் இல்லவர் போற்றிடின் நாட்டின்
நலமுடங்கி நாசமாய்ப் போம்!-------------------------------------------129
புலனடக்கம் இல்லாத போட்டியால் நாடும்
விலங்கொடுங்கும் வீடாகு மே!------------------------------------------130
====== ======= =========