கானா பாட்டு

கானா மெட்டுக்கட்டி
கைகளினால் தாளமிட்டு
காற்றைக் கிழித்தபடி
குரலோங்கிப் பாடுகையில்
காதலிலே தோற்றாலும்
கவலைமறந்து ஓடிடுமே ....!!

தாடி வளர்த்துக்கிட்டு
தண்ணி அடிச்சுப்புட்டு
தந்தைதாய் தவிக்கவிட்டு
தண்டமாய்த் திரிந்தாலும்
தங்கந்தான் எம்புள்ள
தாயுள்ளம் சொல்லிடுமே ....!!

சொத்துப்பத்து ஏதுமில்ல
சொந்தபந்தம் யாருமில்ல
சொல்லிக்கொள்ள ஒண்ணுமில்ல
சொர்க்கமே கானாதானே
சொல்லடுக்கிப் பாட்டுக்கட்டி
சொக்கத்தான் வைப்பேனே ....!!

எழுதியவர் : ராஜ லட்சுமி (30-May-14, 9:19 pm)
பார்வை : 188

மேலே