என் காதல் கதை பகுதி 26

பாரமில்லா மனது இனி பிறக்கும் குழந்தை
எனக்கும் வாய்க்க வேண்டும் என வேண்டி
தினமும் தொடங்கி நின்றேன்
மனத்தால் நடந்து சென்றேன் .....

வாழ்வில் விரைவாய் ஜெய்க்க
நாலுபேர் நம்மை மதிக்க
என்ன நானும் செய்தால்
என யோசித்தே நாட்கள் கழித்தேன்

முயற்சி என்பது பயிற்சி
முடியும் வரை அல்ல
நினைத்த காரியம் முடிக்கும் வரை என்று
நெஞ்சால் உறுதி கொண்டேன்

நெஞ்சை தொடுவான் நண்பன்
உயிரை தொடுவாள் காதலி
உன்னை அறிவாள் தாய்
நான் யாரை அறிந்தேன் என்றே

புரிதல் வாழ்வில் வேண்டும்
பிரிதல் என்றும் வேண்டாம்
சரிந்து போகும் மனமே
சாயாதிருக்க வேண்டும்
விதியால் நோகாமல் இருக்க வேண்டும்


இன்னும் தொடரும் என் காதல் கதை .....

எழுதியவர் : ருத்ரன் (31-May-14, 1:27 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 56

மேலே