வேலை இல்லாப் பட்டதாரி

ஒன்பதாம் வகுப்பு வரை
இலவச தேர்ச்சி!
பத்திலும் பன்னிரண்டிலும்
அனுதாப அலையில்
கரை ஏறியவன்.
கண்கண்ட இடமெல்லாம்
தொழிற் கல்லூரிகள்.
ஆள்ஆரவம் இல்லாக்
காட்டில் இருந்த கல்லூரி ஒன்றில்
எனக்கும் இடம் கிடைத்தது.
அடிப்படையே தெரியாமல்
தொழிற் கல்வியில் தேறி வந்தவன்.
பலமுறை பல்டி அடித்து
நான்காண்டுப் படிப்பைப்
பத்தாண்டில் முடித்து,
இன்று பொறியியல் பட்டதாரி நான்.
வளாகத் தேர்வில் கலந்து கொள்ள
கனவிலும் தகுதியில்லை.
இளநிலை எழுத்தர் தேர்வும்
எனக்கு எட்டாக் கனியானது.
கடைநிலை ஊழியர் தேர்வில்
தேறிவிடுவேன் என்றாலும்
பொறியியல் பட்டம் பெற்ற எனக்கு
அது கவுரவப் பிரச்சனை.
பெற்றோரின் பேராசையால் இன்று
வேலையில்லா பட்டதாரி நான்.
(கலை அறிவியல் பாடங்கள்
மட்டமானவை என்ற
அவர்களின் எண்ணத்தால்)
(வருங்காலத்தில் குறைந்த மதிப்பெண்ணோடு தொழிற் கல்வியில் சேர்ந்து அதன் பின்னரும் கடினமாக உழைக்காமல் தேர்ச்சி பெற்றுவரும் பட்டதாரிகளின் நிலை இது)