எங்கே எனது கவிதை-ப்ரியன்

உன்
முகம்தன்னை நான் பார்க்க
முற்பிறவி பயன் சேரும்
உன்
வார்த்தைகளை நான் கேட்க
வாழ்வின் ஜென்மம் நீளும்
உன்
கைதொட்டு நான் நடக்க
கனவுகள் நிறைவேறும்
உன்
மடியினில் நான் துயில்கொள்ள
மனக்கவலைகள் தீரும்
உன்
அருகில் நான் இருக்க
நிகழ்வுகள் ஜெயமாகும்
உன்
நினைவில் நான் இருக்க
என் உயிர்
நிலத்தில் நிலைத்திருக்கும்.