கடமை தவறும் பொறுப்பாளர்கள்

சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டிய கருப்பு சட்டை,
சட்டத்தை நடைபிணமாக்குகிறது!

சட்டத்தை மதிக்க வேண்டிய காக்கி சட்டை,
சட்டத்தை மிதிக்கிறது!

நாட்டு மக்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டிய கதர் சட்டை,
தன் பிரச்சனையை தீர்க்கவே மண்டாடுகிறது!

உயிரை காக்க வேண்டிய வெள்ளை சட்டை,
உயிரை காசாக்குகிறது!

உரிமைக்கு போராட வேண்டிய பேனாமுனை,
உண்மைக்கு புறம்பாக காசுக்கு விலை போகிறது!

எழுதியவர் : அப்துல் பாஸித்.ச (2-Jun-14, 7:25 pm)
பார்வை : 266

மேலே