வாழ்க்கை எனும் வண்டி
மாட்டை ஓட்டிட்டு இருக்கற
எங்ககிட்ட
வாழ்க்கையை
எப்படி ஒட்டறதுன்னு
படிச்சுக்கோங்க ===
புருஷன் உழைப்பை
புரிஞ்சு
துணை இருக்கோனும் !
பொம்பளைங்க
உதட்டிலே
புன்னகை தவழோனும் !
வேகத்துலே
கயித்தை இழுக்கனும் !
நிதானத்துலே
கயித்தை விடோனும்!
எளிமையா
இருக்கோனும்
அதே சமயத்திலே
வலிமையாவும்
இருக்கோனும் !
வண்டி மேடு பள்ளத்திலே
ஏறி குதிக்கையிலே
கஷ்ட நஷ்டத்தாலே
மனசு சமன் படோனும் !
இயற்கையோடு
ஒட்டி வாழனும் !
செயற்கையை
விரட்டி ஓட்டனும் !
வாழத்தான்
பிறந்து இருக்கோம்
அதை சந்தோசமா
வாழ்ந்துடுவோம் !
வெளி கஷ்டத்தை
வெளியிளியே
விட்டுடனும் !
உள் சுகத்தை
உணர்ந்து ரசிக்கொனும் !
வாழ்க்கை எனும்
வண்டியை
இரண்டு பெரும்
சேர்ந்து ஓட்டினா தான்
வண்டி தடம்
புரளாம இருக்கும்ங்க !
வாழ்க்கை எனும்
வண்டியை ஓட்டுங்க
வண்டியோடு
வண்டி போற போக்கிலே
ஒடுங்க !
மனம் குளு குளுன்னு
இருக்குங்க ......
குளுகுளுப்பு
கிலுகிலுப்பை
கொடுக்கும்ங்க !!!!!!
ஓடறா ராஜா! ஓடறா ராஜா !
ஹை ஹை !!!!!!!!!!!!!

