ஆசையே துன்பத்தின் அடிப்படை

வெளியுலகனுபவம் காணமுற்பட்ட
சித்தார்த்தனக்கு தோன்றிய…

காட்சி துயரங்களை சித்தரித்த
நோய்கொண்டான், அழுகுடல்,
வயோதிகன், முனிவன்…

மனவலிகொண்டு கானகமோடி
புத்தநிலைகொண்டான்

“ஆசையே துன்பத்தின் அடிப்படை”

சொற்கொண்டு பின்னோடிகளுக்கு
புகற்றுதலுடம் வாழவழிகொண்டான்..

பின்னோடிகள் ஆசைமட்டுமே
சிம்மாசனமாய் அரியணைகொண்டான்…
துன்பத்தை தமிழனுக்காக
சட்டம்கொண்டு அளியிட்டான்…

இனவேட்கை கொண்டவன்
யுத்தப்பரிவு காட்டாமையால்…
புகழின்றி புழுதியிலே
பச்சிளங்கள் புதைந்துகிடக்கிறது…

குழிதோண்டி தஞ்சம் கொண்டாலும்
குரலின்றி அமர்ந்து கொண்டாலும்..
துரோகத்திற்கும் வெடிகுண்டுகளுக்கும்
பரிசளிக்கப்பட்டது உடல்கூருகளே..

தேசமின்றி பயனம்கொண்ட
கால்களின் வடிகள் மட்டுமே…
நீங்கா சிற்பமாய் நிலத்திலே
சரித்திரம் சொல்ல காத்திருக்கிறது…

தமிழீழம் பேணித்தொடுத்த
போர்கள் விட்டுசென்றது வடுகளே..
வலிகளை சுமந்த இதயம்
வடுக்களை சுமக்க தயங்கிடாது…

எழுதியவர் : சிவா (3-Jun-14, 11:00 pm)
பார்வை : 192

மேலே