கடமைத்தாய்
வறுமையை
சிறுமையாய்
எண்ணாமல்
சிறுமியை
பெருமையாய் எண்ணி
கல்விக்கூடத்திற்கு
கற்க அனுப்பும் தாய் ===
நிகழ் காலத்தை
இறந்த காலமாக்கி
வருங்காலத்தை
வசந்தமாக்க
வாய்ப்பளிக்கும் தாய் ==
அத்தியாவசிய தேவைகளான
உண்ண உணவு
உடுக்க உடை
உறங்க உறைவிடம்
மூன்றையும்
அனவாசியமாக்கி
குறுகிய
குழாய் வளையத்திலும்
குறிக்கோளில்
குறியாய்
இலக்கிற்காக
இன்னல்களை
இனிதே சுமக்கும்
கடமைத்தாய்க்கு
கரகோஷங்கள் =======