மௌனம் வெல்லும்

உணர்ச்சிகீறலின்
உதிரசொட்டளை
மௌனத்தின் மருந்துதான்
மாற்றுமே உண்மையில் ........
வார்த்தை காயங்கள்
வசைபாடும் மனிதர்கள்
குமுறும் இதயத்தை
குறைக்கும் மௌனமே ......
அமைதி சூத்திரம்
கருணை அஸ்திரம்
மனிதத்தின் அவசியம்
எல்லாம் மௌனமே ........
குற்றம் தவிர்த்திடும்
கொலையை தடுத்திடும்
நன்மை பயத்திடும்
அதுதான் மௌனம் ........
யாருக்கும் தேவைதான்
எங்குமே தேவைதான்
உலகத்தின் அவசியம்
மௌன மந்திரம் ......
வீணாய் சண்டைகள்
விவாத உரசல்கள்
பேச்சுப்போர்களை
வெல்லும் மௌனமே ........