வறுமையா
இந்தியாவில்
வறுமை அதிகம் என்பார்
பண வீக்கம்
அதிகரிப்பு என்பார்
பணப்புழக்கம் இல்லை என்பார்
இலவசங்கள்
வேண்டும் என்பார்.
இத்தனையிலும்
நகை கடை தோறும்
மக்கள் தலையும்
கூட்ட அலையும்
மலைக்க செய்கிறது
வறுமை நாட்டிலா
மஞ்சள் உலோகம்
மாய ஆட்சி புரிகிறது...
மோகத்தை தூண்டி
முதலீட்டை பெருக்கிடவோ....?

