சிறுமை உள்ளகங்கள்

சிறுமை வலுத்து
பொறாமை பெருத்து
சீரற்றுப் போனது உள்ளங்கள்

சிறந்ததை வெறுத்து
இழிந்ததை மதித்து
கலங்கம் ஏற்றது உள்ளங்கள்

உறவுகள் வெறுத்து
நட்புகள் மறுத்து
தனித்துப் போன இதயங்கள்

பணத்தை மதித்து
குணத்தை குறைத்து
மனிதம் இழந்த பிறவிகள்

மற்றவர் உயர்வை
ஏற்பதை விடுத்து
வெதும்பிச் சாகும் மானிடங்கள்

அயலான் பகைவன்
அன்பில் உலோபன்
மதி கெட்டு வாழும் ஊனம் இவன்

நாடும் பலரை
மறுத்துக் கதவை
கொடை மூடும் ஜென்மங்கள்

பணத்தில் உயர்ந்தோன்
குணத்தில் ஏழை
சுற்றம் இழந்த பாவிகள்

கனி மொழி இழந்தான்
வன் மொழி பயின்றான்
சினமது ஏற்ற முண்டங்கள்

சாந்தம் இழந்த
சதி பல கற்ற
மூர்க்கம் ஏற்ற பிண்டங்கள்

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (4-Jun-14, 10:10 pm)
பார்வை : 140

மேலே