புத்தர் பெற்ற ஞானம் எத்தகையது ஒரு கண்ணோட்டம்

கௌதமர், நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார்.கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கை வளர்த்தார்.

சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.

அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையில் அதிருப்தியடைந்தார். ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. ஒரு ஊனமுற்ற மனிதன், ஒரு நோயாளி, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம், நாலாவதாக ஒரு முனிவன். இக் காட்சிகளினூடாக மனிதவாழ்க்கையின் துன்பங்களை உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், ஒரு துறவியாகத் தீர்மானித்தார்.

துறவறம் பூண்ட சித்தார்த்தர், யோக நெறியில் கடுந்தவம் புரிந்தார். தன் தவங்களின் மூலம் உயர்ந்த யோக நிலைகளை அடைந்தாலும், உலக வாழ்க்கையின் துன்பங்களின் ஆதாரத்தை அறிய முடியாததால் அதிருப்தி அடைந்தார். எனினும் தவ வாழ்க்கையை தொடர்ந்து கடைபிடித்தார்.

தனது 35ஆம் வயதில், கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு ஒரு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் தவம் புரிவது என தீர்மானித்தார். ஒரு வாரம் கடுந்தவம் புரிந்தபின் பெருஞ்ஞான நிலையை அடைந்து புத்தரானார். இவர் தன்னை தத்தாகதர் என்று அதாவது 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலை எய்திவர்') என்று அறிவித்துக் கொண்டார். .

வாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரை சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு புத்தி புகட்டினார். அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர். தனது 80ஆம் வயதில் புத்தர் குசினாரா என்ற இடத்தில் காலமானார்.


புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ கூறிக்கொண்டதில்லை. ஆனால் அவரது கொள்கையை காற்றில் பறக்கவிட்டு அநேகர் அவரையும் தெய்வமாக மாற்றி வழிபடுவதை காண முடிகிறது.

தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார்.
அதாவது மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் தவமிருந்து கேட்டு உண்மையை அறிய விரும்பினால் அவர்கள் ஏதோ ஒரு சக்தியின் மூலம் உண்மையை அறிய முடியும் என்பது புலனாகிறது

ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார்....

வாசித்து சில உண்மைகளை பெற்று இருப்பீர்கள் என நினைக்கிறேன் ....

(i respect Buddha but i am not worship him )
Enoch nechum

எழுதியவர் : ஏனோக் நெகும் (6-Jun-14, 12:51 pm)
சேர்த்தது : Enoch Nechum
பார்வை : 265

சிறந்த கட்டுரைகள்

புதிய படைப்புகள்

மேலே