கெஞ்சல்

மனதோடு பேசு -மனமே
மனதோடு பேசு
மணமான மனதுக்கு
மறைபொருள் எதுவென்று
மனதோடு பேசு-மனமே
மனதோடு பேசு

கண்ணீர் வரிகளுக்கு
கதையாய் சொல்லிவிட்டு
கனத்த கட்டி போல
கரையாம கேடக்குறியே
மனமே நீ பேசு
காற்றாய் நீ வீசு
சுத்தமான மனசுக்குள்ள
சுருக்கு பையா சுரிங்கிடியே
மறைக்காம நீ பேசு
மனத்தால் ஒளிவீசு
மஞ்சம் வைக்காம
மடிச்சு வைக்காம
மனமே நீ பேசு
மனதோடு நீ பேசு

எழுதியவர் : மா.காளிதாஸ் (6-Jun-14, 4:43 pm)
Tanglish : Kenchal
பார்வை : 106

மேலே