பேசுகின்ற என் சித்திரமே

..."" பேசுகின்ற என் சித்திரமே ""...

சுந்தரி அவளுக்காய்
சொக்கியே காத்திருக்க
சுட்டெரிக்கும் கத்திரியும்
மார்கழியின் கடுங்குளிரரும்
பருவங்கள் மாறிவரும்
பட்டுபாவாடை தாவணியில்
பகல்நிலவாய் பாவையவள்
தோழிகளோடு கதைபேசி
தெருவோடு வரும்போது
குடைசாய்த மலர்போன்றே
தலைசாய்தே சென்றிடுவாள்
உன் தெத்தி நிற்கும் பல்லழகை
இதழ்விரித்தே புன்னகைத்து
பின்னலிட்ட சடைபிடித்தே
எனை கடந்து செல்லுகையில்
கயல்விழி இமையசைத்து
மெளனத்தால் மொழிபேசி
சொல்லாமல் சொல்லிவிட்டு
நில்லாமல் போவதுமேனோ
மேகங்கள் உரசிக்கொள்ள
மின்னல்கள் வருவதுபோல்
மோகங்கள் படர்ந்து வந்து
பார்வையாலே பந்தியிட
புதுக்கவிதையினை பிரசவித்து
காற்றடிக்க கலைந்துவிடும்
மேகம்போல் மறந்ததேனோ ,,

என்றும் உங்கள் அன்புடன்,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (6-Jun-14, 4:56 pm)
பார்வை : 92

சிறந்த கவிதைகள்

மேலே