என் காதலும் நீயே என் கனவுகளும் நீயே

உன் விழிகள் பேசும் வார்த்தைகளைமொழி இல்லாமலேயே அர்த்தம் கொள்ளும் என் காதல் ...
உந்தன் மூச்சுகாற்றின் வார்த்தைகளையும் மொழிபெயர்க்கும் என் காதல் ..
வளையோசை மெல்ல சங்கீதம்பாட -உன்
விழி உறங்க வைக்கும் காதல் ....
விரல் தீண்டி நீபேசும் நேரத்தில் வின் தாண்டி பறக்கும் என் காதல் ...
உன் ஸ்பரிசங்கள் எனைதீண்ட இறகைபோலே மிதக்கும் என் காதல் ....
பூ ஒன்றை நீ சூட பூங்காற்றாய் மாறும் என் காதல் ..
மயிலிறகில் மனமெல்லாம் பூகோலமிடும் காதல் ..
பொன்தாலி நீ சூடும் திருநாள் தனை காண தவமிருகிறது என் காதல் ...