நிசப்தம்
நிர்மலமான
எண்ணங்களின்
உறைவிடம் !
நல்
சிந்தனைகளின்
ஆழமான ஊற்று !
சப்தத்தை
அடக்கும்
ஆயுதம் !!
சக்தியை
அளிக்கும்
சாளரம் !!
மன
சிதறல்களின்
மருந்து !
மனித உறவுகளுக்கு
அழகூட்டும்
ஆபரணம் !!
ஆற்றலை
அளிக்கும்
சப்தத்தை அழித்து
ஆற்றலை
வளர்க்கும்
நிசப்தத்தை பேனுவோம்!!!

