காத்திரு கன்னி நீயும்

மைவிழி பொழிவது
மையலின் தாக்கமா !
மையம் கொண்ட
காதலின் விளைவா !
கண்ணீர்த் துளிகள்
கண்மாய் ஆனதேனோ !
கண்ணீர் வெள்ளமும்
கரை உடைப்பதேனோ !
தோல்வியின் விளிம்பில்
தோகையவளின் நிலையா !
தோற்பதும் வெல்வதும்
தோன்றிடும் மாயைதானே !
காத்திரு கன்னி நீயும்
காலமும் கனிந்திடும் !
கண்ணீர் தேக்கமும்
களிப்பின் கேணியாகும் !
பழனி குமார்