கணிப்போர் காதலை உணர்ந்தோர்

​விழிகளில் தெரியுது விரகதாபம்
விரல்களும் கூறுது விவரத்தை !
வழியிலே நிற்பதும் நினைவாலே
வருகின்ற பாதையும் தெரிவதாலே !

இமைகள் துடிப்பதை மறக்குது
இதயத்தின் சுமையை கூட்டுது !
இதழ்கள் இணைந்திட மறுக்குது
இடைவெளி காலத்தை காட்டுது !

உடலோ உறைந்த சிலையானது
உள்ளத்தில் கவலை நிலையானது !
சிந்தையோ கொதிக்கும் உலையானது
சிந்திக்கும் நொடியோ விலையானது !

வார்த்தைகள் வழுக்குது நாவினிலே
வாயதில் விழுகிறது வெளிவராமலே !
சோகமோ முகத்தினில் வழிகிறது
சோர்வோ அகத்தினில் நிறைகிறது !

பனிப்போர் பாவையவள் பார்வையில்
கணிப்போர் காதலை உணர்ந்தோர் !
இனிப்போர் இந்நிலையை அறிந்தோர்
தணிப்பான் தலைவனும் வந்தென !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (7-Jun-14, 9:14 am)
பார்வை : 198

மேலே