இந்த பிறவி ஏன்

காதல் களியாட்டத்தில்
கந்தறுந்து போனபின்னே
கண்ணீர் கடல் வரண்டு
நிற்கையிலே
கைகொண்டு தூக்கிட
வந்தவனையும் தறிக்கெட்டு
துரத்திட்டு
தனிமரமாய் நிழல் அற்ற மாதர் குரலுடன்

தரணியின் வறுமை
தொண்டையை இறுக்கையிலே
வரதச்சனை கொடுதிடமுடியாமல்
வயதிழந்து முதிர்கனியாய்
பரிதவிர்க்கும் மாதர்களின்
பரிகுரல் தரிணியிலே
தவழவும் கண்டேன்

போரெனும் சிப்பிலியால்
சிறகுடைந்து போன வாழ்க்கையிலே
சிக்கி தவித்து தப்பித்து
வந்தபினே சில்லறை வயதினிலே
துணையிழந்து துன்புறும்
மாதர் கூட்டம்
விலை மங்கையை போல்
கையேந்தி நிற்கக்கண்டு
கண்கொண்டு பிறவி ஏனோ
உள்ளம் உரைக்க கண்டேன்

எழுதியவர் : அருண் (8-Jun-14, 12:04 am)
சேர்த்தது : அருண்
Tanglish : intha piravi aen
பார்வை : 91

மேலே