தனிமைப் பறவைகள்

எதிர்காலத்தின் கட்டாயமாம் கல்வி கற்றிட
வீடுவிட்டு வனவாசமான விடுதி வாழ்க்கை...!

உலவிட உலகமே இருக்கிறது
ஆனாலும் நான்கு அறை சுவருக்குள் வாழ்க்கை...!

தாய்மொழியில் இன்மிகு வார்த்தைகள் பலயிருந்தும்
தாயிடம் பரிமாற இயலாததால் முடங்குகிறது மொழி...!

தற்காலிக அனாதையாய் ஒரு பயணம்
உலகமே வெறுமையாய் போனதாய் தோன்றும்....!

ஒரே மரத்தில் பலகூடுகளாய் வாழ்க்கை
கூண்டுகள் திறந்திருந்தும் பறவைகளே பூட்டிக்கொள்ளும்....!

விடுமுறைகள் ஒவ்வொன்றும் விடுதலைக்குச் சமம்
விதிமுறைகள் ஒவ்வொன்றும் சுடுதலுக்குச் சமம்...!

வீட்டுச் சோற்றின் சுவைப் புரியும்
விட்டில் பூச்சியாய் மனம் சுற்றித் திரியும்...!

கட்டுப்பாடுகள் தட்டுப்பாடின்றி இங்கு உண்டு
விட்டுக்கொடுங்கள் கட்டுப்பாடின்றி நன்மை உண்டு...!

குயில்கள் கூட்டமாய் கூவுவதில்லை அப்படியே
கூவினாலும் தனிக்குயிலின் கூவலுக்கு இணையில்லையே...!

தனிமைகள் பல ஆசானுக்கு நிகர்
அவைகள் கற்றுத்தராததை எதுவும் கற்றுத்தருவதில்லை...!

வீடு திரும்பும் காலத்தை எதிர்பார்த்தே இந்த
தனிமைப் பறவைகள் கூடுகளில் ஏக்கத்தோடு காத்திருக்கின்றன....!

எழுதியவர் : அலெக்சாண்டர் (8-Jun-14, 2:10 am)
பார்வை : 78

மேலே