அம்மா சுட்ட லட்டு
பாகில் விழுந்த மனம்
உதிர்ந்து லட்டாய் மாறியது
அன்னை ஓரிடத்தில்
வளர்த்த பிள்ளை வேறிடதில்
பாசத்தை உருட்டி பாகாய்
சுட்டு தந்தாள் லட்டு
மொட்டாய் இருந்த மனது
மலர்ந்து லட்டாய் மாறியது
உருக்கிய பாகு
நெஞ்சுருகிய பாவு
மாவு உருமாறியதோ
அம்மாவின் மனம் உருகியதோ
அன்பு அரவணைப்பு பரிவு
குழைத்து பூந்தியாக்கியதோ
திராட்ச்சை முந்திரி
சுக்கு ஏலம் அதனுடன் சேர்த்து
தாய் பாசமாய் ...
சர்க்கரை பாகில் குழைத்து
பார்சலில் வந்ததோ
கைகள் சிவக்க
சிவந்தது லட்டு
என் விழிக்கு விருந்தாய்
அவள் வலிக்கு மருந்தாய்
அமுதாய் தந்தாள் லட்டு
புட்டு உண்டேன் தேன்சொட்டு