neelamegampv - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  neelamegampv
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Jun-2014
பார்த்தவர்கள்:  79
புள்ளி:  5

என் படைப்புகள்
neelamegampv செய்திகள்
neelamegampv - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2015 3:40 am

தளிர் மேனி துளிர்விடவே -கண்டு
தவித்ததோ அவனது மோகம் இன்று !

அவளது அன்னநடைகண்டு இருகண்கள் விரிய
விரதம் முடிக்க துடித்ததோ மனவண்டு!

வாழைத்தண்டு காலின் பாததடதிற்க்கு மேல்
படிந்திருக்கும் கோவில் மணியொலி கொலுசு !

புள்ளிவைத்து கோலமிட்ட வில் புருவம்
துள்ளி ஓடும் மானின் சாயல் விழி !

மகிழம்பூ வாசம் அவளது திருமேனி
மனதை துளைக்கும் திருகாணி !

செப்புத்தகட்டில் செதுக்கிய மேனியவள்
செப்புமொழியால் செம்மொழியானவள்!

உப்புகாற்றுபடாத செவ்விதழ் கொண்டவள்
கண்டத்தின் கீழிரு செம்மாதுளை சுமப்பவள்!

சுரங்க பொக்கிசத்தை தன்னகத்தே கொண்டவள்
உள்நுழைந்தள்ள முடியா? இருகரம்கொண்டவன் நான

மேலும்

neelamegampv - கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2014 1:35 am

ஓர் இரவு விழித்தேன்
ஓர் பகலை தொலைத்தேன்
தினம் தினமும் இதுபோல் ...

உன் நினைவாலே ...
இரவு ...
காதல் மயக்கத்தில்...

பகல்
போதை மயக்கத்தில்...

மேலும்

அருமை நண்பா 29-Sep-2014 9:12 am
காதல் வலி !அருமை ! 29-Sep-2014 1:52 am
neelamegampv - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2014 1:49 am

விண்ணில் ...
விண்மீன் காட்டினாய் வியந்தேன்
முழு மதியை காட்டினாய் மனமகிழ்ந்தேன்
இன்று ..
எனைபிரிந்த உன்னை
எரியூட்டும் போது மனம் வெந்து
எல்லாம் இழந்தேன் தாயே !

மேலும்

அருமை ! 29-Sep-2014 10:36 am
அருமை! 29-Sep-2014 9:15 am
neelamegampv - கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2014 1:23 am

அரை கஞ்சி குடித்தாலும்

குறைவின்றி எனை வளர்த்தவளே

பிறை நெற்றி திலகம் மறைந்தாலும்

நிறை அன்போடு காப்பவளே !உறவுகள் உன்னை உதாசீனப் படுத்த

எனக்காக பொறுத்தவளே

கடைகோடி வாழ்கை வாழ்ந்தாலும்

விடையறிய அறிவுபசி துண்டியவளே !நோய்நொடியில் வீழ்ந்தாலும்

வாய்திறவாது என்நலனை எண்ணி

அயராது உழைத்தவளே

பல அவதாரம் எடுத்து வளர்த்து

ஒரு தாரம் தந்தவளே …!வந்தவள் மகிழ்வாயிருக்க

பல துன்பங்கள் சுமந்தவளே

பெற்றகடன் முடிக்க வழியின்றி நான் தவிக்க

மென்மேலும் கடனாளியாக்கி எனை

கடைந்தேறும் வழியடைக்கிறாய் !!நெஞ்சத்தில் புதைந்த உன்னை

பஞ்சத்த

மேலும்

அம்மாவின் அருமை மிக அருமை.... 29-Sep-2014 11:33 am
அருமை அருமை !! 29-Sep-2014 10:33 am
அருமை நண்பரே. 29-Sep-2014 7:02 am
ஆஹா!அருமையான தாயின் பாசம் 29-Sep-2014 1:40 am
neelamegampv - கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2014 10:04 pm

மீன் விழி கொண்டவளே
என் கருவிழி வென்றவளே
மனதில் நின்றவளே !
இதயம் கவர்ந்தவளே...!

உனை காண தவமிருப்பேன்!
உனைக் காணாது தவித்திருப்பேன்
உன்னில் எனைக் காண்கிறேன்!
இதயம் இடம் மாறியதால்...

சிங்கம் நானடி
உன்னழகை கண்டு அசிங்கமானேனடி !
காதல் என்னை கௌரவம் கொள்ளட்டும்
காதல் எந்தன் கர்வத்தை வெல்லட்டும் !

மேலும்

வாழ்த்துக்கு நன்றி ! 17-Jun-2014 9:40 pm
கருத்திற்கு நன்றி ! 17-Jun-2014 9:39 pm
நன்றி தோழி ! 17-Jun-2014 9:39 pm
அருமை நட்பே 17-Jun-2014 9:27 am
neelamegampv - கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jun-2014 10:25 am

கரு சுமந்த தாயே
கல் சுமந்திருந்தால்-நல்
வீடாகி இருக்கும்
எனை சுமந்து நீ வீணானதேனோ !!

குடிகார குழந்தையால்
வாழ்வை வீணாக்கியதேனோ!
உலகாழ்வேனென்று கானா கண்டாயோ
சாலையோரம் சுருண்டு
உணர்வற்று கிடக்கின்றேன் தாயே !

கால்காணி கொண்டு உழைத்து
எனைவளர்த்தாய் நீ நன்று
குடிபோதை கொண்ட மயக்கம்
கால் பொன்தாலி அறுத்து
உன் உயிர்போக சாய்தேனே...!

எவன் தந்த சாபமோ !உனக்கு
எமனாக பிறந்தேன் தாயே !
அவள்மீது கொண்ட கோபம்
குடிபோதையில் குப்புறத்தள்ள
அடிமாடாய் குடிக்காரனானேனோ !

அறிவற்ற செயல்தானிது-இப்போது
அறிந்து என்செய்ய ...
பிடிசோறு ஆனாலும் காத்து
பிரியமாய் ஊட்டினாயே!
உன்வயிறு காய்

மேலும்

மது தந்த மயக்கம் பணமுள்ள வரைக்கும்! நீதந்த அமுதம் உயிருள்ள வரைக்கும்! அருமை! 09-Jun-2014 11:31 pm
மன்னிக்க கோரவில்லை மரணவலி தங்கவில்லை என்னைப் போல் இழந்தவர்க்கு என்விதி பாடமாகட்டும் .. அருமை ஐயா.. 09-Jun-2014 3:51 pm
அருமை ! 09-Jun-2014 1:34 pm
அருமை ! 09-Jun-2014 11:10 am
neelamegampv - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2014 5:41 pm

பாகில் விழுந்த மனம்
உதிர்ந்து லட்டாய் மாறியது
அன்னை ஓரிடத்தில்
வளர்த்த பிள்ளை வேறிடதில்
பாசத்தை உருட்டி பாகாய்
சுட்டு தந்தாள் லட்டு

மொட்டாய் இருந்த மனது
மலர்ந்து லட்டாய் மாறியது
உருக்கிய பாகு
நெஞ்சுருகிய பாவு
மாவு உருமாறியதோ
அம்மாவின் மனம் உருகியதோ

அன்பு அரவணைப்பு பரிவு
குழைத்து பூந்தியாக்கியதோ
திராட்ச்சை முந்திரி
சுக்கு ஏலம் அதனுடன் சேர்த்து
தாய் பாசமாய் ...
சர்க்கரை பாகில் குழைத்து
பார்சலில் வந்ததோ

கைகள் சிவக்க
சிவந்தது லட்டு
என் விழிக்கு விருந்தாய்
அவள் வலிக்கு மருந்தாய்
அமுதாய் தந்தாள் லட்டு
புட்டு உண்டேன் தேன்சொட்டு

மேலும்

அருமை 09-Jun-2014 2:47 pm
சுட்டது வலிக்கலை கண்ணில் பட்டதும் வலிக்குது லட்டு ! 08-Jun-2014 7:11 pm
அருமை. 08-Jun-2014 5:47 pm
neelamegampv - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2014 6:44 pm

விடியலில் பூத்தது வெள்ளி
புல்வெளியில் போர்த்திய மல்லி
கதிரவன் கண் பட்டு
முடிந்தது வாழ்க்கை
வருடிய ஈரம் மனதில்
நினைவு சுமக்குது பாரம்
நாளைய இரவினை எண்ணி
இன்றைய விடியலின் கோபம்
என் மனம் தனியே தவிக்குது !

மேலும்

முத்தாய் பூக்கட்டும் முதல் பதிப்பு ! 08-Jun-2014 7:12 pm
கருத்து தந்து ஊக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி ! 08-Jun-2014 5:22 pm
உங்கள் முதல் பதிவு... பனித்துளிபோல்..அழகே..! தொடருங்கள்.. தோழமையே..! பல சிறந்த பதிவுகள் பதித்து பரிசுகள் பெற வாழ்த்துக்கள்..! நட்புடன் குமரி பையன் 08-Jun-2014 4:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
manoranjan

manoranjan

ulundurpet
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (4)

manoranjan

manoranjan

ulundurpet
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

manoranjan

manoranjan

ulundurpet
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
மேலே