நினைவெல்லாம் நீயே அம்மா

அரை கஞ்சி குடித்தாலும்

குறைவின்றி எனை வளர்த்தவளே

பிறை நெற்றி திலகம் மறைந்தாலும்

நிறை அன்போடு காப்பவளே !



உறவுகள் உன்னை உதாசீனப் படுத்த

எனக்காக பொறுத்தவளே

கடைகோடி வாழ்கை வாழ்ந்தாலும்

விடையறிய அறிவுபசி துண்டியவளே !



நோய்நொடியில் வீழ்ந்தாலும்

வாய்திறவாது என்நலனை எண்ணி

அயராது உழைத்தவளே

பல அவதாரம் எடுத்து வளர்த்து

ஒரு தாரம் தந்தவளே …!



வந்தவள் மகிழ்வாயிருக்க

பல துன்பங்கள் சுமந்தவளே

பெற்றகடன் முடிக்க வழியின்றி நான் தவிக்க

மென்மேலும் கடனாளியாக்கி எனை

கடைந்தேறும் வழியடைக்கிறாய் !!



நெஞ்சத்தில் புதைந்த உன்னை

பஞ்சத்தில் புதைக்கிறேன்

வஞ்சத்தில் சிக்குண்டு

இருகொல்லியாய் இருப்புகொள்ளாது

வழியறியாது தவிக்கிறேன்



எந்தவம் செய்தேன்

உன்கருவில் உயிராக

அடுத்த பிறப்பொன்று அமைந்தால் தாயே

என் மகளாக நீ பிறந்து

உன்கடனை அடைக்க

கைமாறு செய்யும் அம்மா !

எழுதியவர் : கனகரத்தினம் (29-Sep-14, 1:23 am)
பார்வை : 2898

மேலே