அம்மா
அம்மா
வார்த்தை வலிக்கின்றது! வரிகள் நழுவுகின்றன!
வருத்தப்படாதீர்கள், வந்துவிட்டேன் உளறி முடித்துவிடுகின்றேன்.
அம்மா என்றதும் அருவியென வந்தது
அருவி பாய வழியும் இல்லை!
அதை உணர்த்த மொழியும் இல்லை!
என் மலரடிகளால் உதைத்த போது
அவள் இருந்தாள் ஆனந்தத்தின் உச்சியில்!
அவள் அணைத்த அணைப்புக்கு
ஆயிரம் கோடி இணையாகுமா?
அவள் பாச முத்தத்திற்கு
பா(ஆ)யிரம் பல பாடலாம்!
அவள் உடுப்பின் கதகதபிற்கு
பஞ்சணையும், மலர்மஞ்சமும் தோல்வி காணும்!
அவள் மொழி நானறிவேன்
என் மொழி அவள் தவிர எவரறிய கூடும்!
வள்ளிக்கிழங்கின் சுவையும், வருத்த கருவாட்டின் வசமும்
வஞ்சனையில்லாமல் கிடைத்தது அவளாட்சியில்!
வலிக்காத அடிகள் தந்த
அவளை வலி கொள்ள செய்திருப்பேனோ!
நண்பனே கேள்!
முன் சுமந்த அவளை
பின் சுமக்க மறுக்கின்றாயே!
பழுத்த அகவில் அவளுக்கு அண்ணமிடாத நீ,
கரைத்த பிறகு பலகார படையலிட்டு என்ன பயன்?
என் ஓசைக்கு மடி சுரந்தவளை!
என்னை விட்டு மறைந்தவளை!
வார்த்தைகளால் வடிக்க முடியாதவளை!
கண்ணீர் வடித்து கழுவ நினைத்தேன்,முடியவில்லை!
என் உளறல் முடியும் முன்னே
என் கண்ணீர் கரைந்துவிட்டிருந்தது!........