என் ஆதியின் அந்தம்
அன்பே அழகானவளே
அம்மா !
உன் அகமே முகமா
அழகா சிரிப்பாயே
ஆனா
அந்தம் வரை சிரிச்சு
ஆதி காரணம் மறச்சாயே
உன் சேலையில தலைதுவட்ட
மழையில நான் நனைஞ்சா
மண்டையில குட்டு வச்சு
மறக்காம தல துவட்டி
உச்சியில முத்தம் தந்து உசுரையே நனைச்சவளே
நிலவொளியில நிலப்படியில
உம்மடிசாஞ்சா
முத்தமிடுமே உம்மூச்சுக்காத்தும்
என் நெத்தியில
எத்தன முற அழுதாலும்
உன் சிரிச்ச முகம் மறக்கலையே
என்னப்பெத்து எடுக்க
செத்துப்பிரந்தவளே
அத்தன முற நான் அழுதாலும்
நீ பட்ட வலி
உன் விழி கூட காட்டலையே..!
நான் படிச்சு பட்டம் வாங்கையில
என்ன விட்டுப் போனவளே..!
உன் பேச்சக்கேட்க முத்து இருக்க
மூச்சடக்கி முத்தானவளே..!
சிப்பிக்குள்ள உன்ன வச்சு
மண்ணுக்குள்ள மறச்சுப்புட்டேன்..!
மகளா வந்து விடு
மறு பேச்சு பேசாம..