அவள் ஒரு சுயநலவாதி

என் அன்னை
அவள் ஒரு சுயநலவாதி

நேற்றைய(27/09/2014) அறை பொழுதில்
என் கைபேசியின் அழைப்பில் அவள்

சனியன்றும்
பணியென்று இருந்தவனுக்கும்
பிணி ஒன்றும் நேரிடக் கூடாது
என்ற பரிதவிப்போடு சொன்னாள்
வேடிக்கை பார்க்க கூட
வெளியே செல்லாதே

நான் அறிவேன் என் அன்னை
இதற்கு தான் அழைத்தாள் என்று

பத்திரமாக வீடு சேர்ந்தேன் என
பரிதவித்துக் கொண்டிருப்பவளிடம்
பாச வலைப் பின்னி என்னை
பாதுக்காத்துக் கொண்டிருப்பவளிடம்
சொல்ல மறந்தச் சோம்பேரி நான்

அன்னை பிரிந்து வாழும் அத்தனை
நெஞ்சங்களுக்கும் இது பொருந்தும்

அன்னை அவள் ஒரு சுயநலவாதி
அதனால் தான் அவள் பசியில் இருந்தாலும்
பாலூட்ட மறப்பதில்லை

அன்னை அவள் ஒரு சுயநலவாதி
அதனால் தான் பாதாளத்தில் இருந்தாலும்
என்னை(நம்மை) பாதுகாக்க மறப்பதில்லை

எழுதியவர் : சதீஸ்குமார் பா ஜோதி (28-Sep-14, 3:54 pm)
பார்வை : 204

மேலே