இழந்தது உன் பாசத்தை
நான் இழந்தது
உன் பாசத்தையும்
பரிவையும்
என் நிம்மதியையும் மட்டுமல்ல...
தெரு முனையில்
திரும்பும்போதே
ஊரையே சுண்டியிழுக்கும்
வாசனை நிறைந்த
நெத்திலி கருவாட்டுக் குழம்பும்,
அன்பில் ஊறிய
உன் இதயம் போல
நீரில் ஊறிய பழைய சாதத்தையும் தான்.......