மாதாவின் பாசம் மது தந்த சோகம்

கரு சுமந்த தாயே
கல் சுமந்திருந்தால்-நல்
வீடாகி இருக்கும்
எனை சுமந்து நீ வீணானதேனோ !!

குடிகார குழந்தையால்
வாழ்வை வீணாக்கியதேனோ!
உலகாழ்வேனென்று கானா கண்டாயோ
சாலையோரம் சுருண்டு
உணர்வற்று கிடக்கின்றேன் தாயே !

கால்காணி கொண்டு உழைத்து
எனைவளர்த்தாய் நீ நன்று
குடிபோதை கொண்ட மயக்கம்
கால் பொன்தாலி அறுத்து
உன் உயிர்போக சாய்தேனே...!

எவன் தந்த சாபமோ !உனக்கு
எமனாக பிறந்தேன் தாயே !
அவள்மீது கொண்ட கோபம்
குடிபோதையில் குப்புறத்தள்ள
அடிமாடாய் குடிக்காரனானேனோ !

அறிவற்ற செயல்தானிது-இப்போது
அறிந்து என்செய்ய ...
பிடிசோறு ஆனாலும் காத்து
பிரியமாய் ஊட்டினாயே!
உன்வயிறு காய்ந்தாலும்
எனக்காக வருந்துவாயே !

மது தந்த மயக்கம்
பணம் உள்ள வரைக்கும்
நீ தந்த அமுதம்
இந்த உயிருள்ள வரைக்கும்
அது மறந்து கொலைபாதகம் செய்தேனே !

உண்ணஉணவின்றி உன் நினைவால்
உறக்கமின்றி தவிக்கிறேனே- இன்று
குடியால குடிக்கெடுமென்று
அறிந்தே தான் பலர் குடிக்கிறாரோ !
எனைப் போல எத்தனை தாயாரை
தொலைத்தப் பின் வருந்துவாரோ !

மன்னிக்க கோரவில்லை
மரணவலி தங்கவில்லை
என்னைப் போல் இழந்தவர்க்கு
என்விதி பாடமாகட்டும்
அதற்காகவேனும் நரவேதனை
நான் அனுபவித்து தீரவேணும் !

எந்தவிப்பை இப்போதும் நீ பார்த்து
கதறுகிராயே என் தாயே !
எத்துணை கருணை கொண்டவள் நீயே !
உனைகொன்று எனைமாய்த்து கொண்டேனே !

எழுதியவர் : கனகரத்தினம் (9-Jun-14, 10:25 am)
பார்வை : 97

மேலே