குப்பை தொட்டி தாயாகிறாள்

தாலாட்டும் நானறியேன்
தாய் முகமும் நானறியேன்
தந்தை என்முன் பெயரும் நானறியேன்
முன் எழுத்து ஆயிரமிடத்தில்
கேள்விகள் பல கோணத்தில்
பதில் நானே அறியேன் .

உதித்த இடம் ஓர் மறைவு
பிறந்த இடம் கழிவறை
விழுந்த இடம் குப்பை தொட்டி
வளர்ந்த இடம் அநாதைகள் இல்லம்
சொந்த இடம் யாதென சொல்வேன்.

பத்திரத்தில் அறிவழகி
இல்லம் வழங்கிய நற்பெயர்
பார்ப்போர் முன் அறிவழகி
பின் முதுகில் அநாதை
சமூகத்தின் பல வேடங்கள்
சகித்து வாழும்
கழிவறை குழந்தை நானே .

நட்பெனும் பெயர் தொடுத்து
காமத்தின் பசி தேடி
மனித உருவில் நடமாடும்
உணர்ச்சியற்ற மிருகங்கள்
மிருகத்தின் இன்பம் - இன்று
துயரத்தில் வாழும்
கழிவறை சிசுக்கள்.

உயிராக்கும் இறை வடிவ பெண்ணே
அன்புக்கு ஆலயமும் நீயே
எப்போது நீ மாறினாய்?
பெண் உருவில் எமனாக
ஆண்களை சிறை வைத்து - நீ
நிரபராதி சட்டம் உன் நண்பனே
எப்போது மாறும் சட்டத்தின் கீதை.

தொப்புள் கொடி உறவை உன் மடியில்
உன் உயிர் பிழிந்து அன்போடு பாலூட்டி
உன் தாலாட்டின் இசையில்
தன் நிலை மறந்து தூங்க வைத்தவளே
எப்போது நீ மாறினாய்?
கள்ளிப்பால் நிபுணராக
சங்கு ஊதுவதற்கு .

எழுதியவர் : அன்புடன் விஜய் (9-Mar-11, 3:45 am)
சேர்த்தது : vijeyananth
பார்வை : 397

சிறந்த கவிதைகள்

மேலே