பித்தன்
கம்பன் வீட்டு
கட்டுத்தறி
கவிபாடும் அறியேன்
நான்
உன் கண்னம்
தொடும் காதனி
கவிபாடும் அறிவேன்
நான்
காவிய காதல்
கதைகள்
அறியேன் நான்
உன் விழிகள்
பேசிடும் கதைகள்
அறிவேன் நான்
சங்கீத ஆலாபனை
அறியேன் நான்
உன் கால் கொலுசு ஜதி
அறிவேன் நான்
கவி எழுதிடும்
நடை அறியேன் நான்
தமிழ் நடை நாணும்
உன் நடை
அறிவேன் நான்
இத்தனையும் அறிந்திட்ட
பித்தன் நானடி
நான் உந்தன்
காதல் என்று
ஒரு முறை கூறடி