நீயும் நானும்

பாவை யுன்
பிம்பத்தின்
பிரதிபலிப்பே எனை
பித்தனாக்குதே ...

என்று வரக்கூடும்
கருணையாய்...
உன் பார்வைகள்
என் கருவிழிக்குள்

' நீயாகவே '
நிதம்... நிதம்
வந்து விழுந்துவிடு
என் விழிகளுக்குள் ...

நீயின்றி
நான் ஏது ?

நிழல் பிரியா ...
நிஜத்தை போல்

நிச்சயமானது
நிகழ்காலமே
புரிகிறது ...

விழியசை
விபத்தின்றி
உலா.. வருவோம்

விடியல் இல்லா
உலகு நோக்கி ...

உடல்களைந்த
உணர்வுகளில் ..நாம்
உயிர்சுமந்து

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (9-Jun-14, 7:47 pm)
Tanglish : neeyum naanum
பார்வை : 255

மேலே