என் ஜோடிப்புறாவே

ஜோடிப்புறாவே..
தூது செல்லும் உந்தன்
துயர் துடைப்பதாரோ ?
நீயும்
ஏன்
என்னைப்போல்
தனிமையாய்
கூண்டுக்குள்ளே ...
உந்தன்
ஜீவனை பிரித்த
ஜீவராசி யார் ?
கூண்டினுள் உன்னையிட்ட
கூற்றுவன் யார் ?
உடலை பிரித்துவிட்டான்
உள்ளத்தை ..
என் ஜோடி நீயின்றி
என்னுள் நான்
ஜோதியற்றிருக்கிறேன் ..
கற்பனையை தொலைத்துவிட்ட
கவிஞன் போல்
கதறுகிறேன் ...
தண்ணீர் விட்டு
தவறி விழுந்த மீனைப்போல்
துடிக்கிறேன் ...
சூரியன் மறந்த
சூரியகாந்தியாய் உடல்
தளர்கிறேன் ...
நரம்புகள் அறுந்த
வீணையாய்
நாதமற்று போகிறேன் ...
உரிக்கும் வெங்காயத்தை போல்
உள்ளுக்குள் வெறுமையாய்
உணர்கிறேன் ...
என் ஜோடிப்புறாவே
"நீயின்றி "
என் கண்களில் பார்வையில்லை
என் செவிகளில் ஒலியில்லை
என் சுவாசங்களில் சுவாசமில்லை
என் இமைகள் இமைக்கவில்லை
என் இளமையில் இனிமையில்லை
என் இருதயம் துடிக்கவில்லை
அட இன்னுமா
நான் ...
இறக்கவில்லை ?
** குமரேசன் கிருஷ்ணன் **