சில்மிசனே

நீ இருக்கும் நேரங்களில்
உன்னை திட்டும்
மனது
நீ இல்லா நேரங்களில்
உன்னை தேடும்

நீ வெளியூர் சென்றிருந்த
வேலையில் தான்
அதன் கள்ளத்தனம் கண்டேன்

உடைமாற்றும் அறையில்
நுழைந்தாலே
உன் ஒவ்வொரு உடையிலும்
நீ ஒவ்வொன்றாய் தெரிந்தாய்

உன் அழுக்கு துணிகளை
துவைக்காமலே உன்னை
அதில் பார்த்து கொண்டிருக்கிறேன்

கண்ணாடி முன்னே நின்றால்
நீ கண்ணடிப்பதாய் உணர்ந்தேன்

பொட்டு வைக்க மறந்து
கண்ணாடிக்கு வைத்தேன்

அட துரோகி
நான் தூங்ககூடாதென்று

நம் படுக்கை அறை எங்கும்
நீ உன் நினைவுகளை
மட்டும் தூவி சென்றாயோ

படுக்கையில் எங்கு படுத்தாலும்
உன் பொல்லாத விரல் தீண்டும்
ஞாபகம்.

நான் உன்னை ஒன்று
கேட்பேன்
மறுக்காமல் செய்வாயா?

எப்போதும் கொஞ்சியே
என்னை கொல்லாதே

ஒரு முறையாவது
கோபமாய் திட்டு

அப்படியாவது உன் கோபத்தை
காண வேண்டும்.

பார்த்தாயா என் நிலைமையை!
திட்டை கூட கெஞ்சி கேட்கும்
கிறுக்கியாக்கி விட்டாயே!

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (11-Jun-14, 10:32 am)
சேர்த்தது : தேவி ஹாசினி
Tanglish : silmisane
பார்வை : 99

மேலே