கூறிறோ நீரும்

மௌனம் தித்தித்தது ,
இடைவெளிகள் அளக்கப்பட்டது ,
விழி வீச்சு அணு ஆற்றல் மிஞ்சியது ,
புன்னகைகள் இதய துடிப்பை அசாதாரணமாய் அதிகபடுத்தியது,
மூளை தெளிவாய் தன் நிலை மறந்தது ,
அசைவுகள் ஒவ்வொன்றும் துல்லியமாய் பதிவானது ,
மீண்டும் மீண்டும் அவையே ஓட்டப்பட்டது ,
புதிய பதிவுகள் ஏதும் ஏற்கப்படவில்லை ,
நிகழ்ந்தது அனைத்தும் .. அவனை கண்டதும் !
அறிகுறிகள் இவையே ...

நடப்பது என்ன ?
நோவோ இதுவும் ,
நோய் கிருமியோ அவனும் ,
கூறிறோ நீரும்?

நோவென்று கொள்ளவோ ?
உடலின் வழக்கம் அனைத்தும் மாறுபடுவதால் !
ஆரோக்கிய வாழ்வின் ஆரம்பம் என்று கொள்ளவோ ?
அறிந்தோர் பலர் , இதன் காரணியாம் கிருமியை உடன் ஏற்று சந்தோஷிப்பதால் !
அறியேன் நானும் !
மனதை சரி செய்யும் வேலையில் மூளையும் மூழ்கி போனதால் ,
கூறிறோ நீரும் ?
நோவோ இதுவும் ?

எழுதியவர் : மகா (11-Jun-14, 8:44 pm)
பார்வை : 106

மேலே