நதி பார்க்க செல்லாதே நீ

நீர் செல்லும் நதி
நீ சென்றதும்
செல்லாமல் நின்றது.
உனை ரசித்ததும் கடந்திட
எந்த துளிக்குதான் மனமிருக்கும்..!
-----------------------------
உன்னால்
நீர் வாழும் மீன்களெல்லாம்
தரை வாழ் உயிரினமாய்
மாறிக்கொண்டிருக்கின்றன..!
---------------------------------------

அங்கே மீன்கள்
விளையாடித் துள்ளுகின்றன
என நினைத்திருக்கதே..!
உன்னை ரசிக்கத் தான்
துள்ளிக்கொண்டிருக்கின்றன
நீர் மேல் மீன்கள்..!!
---------------------------------------

கரையில் அமர்ந்ததோடு
சென்று விடாதே.
நதியில் கால் நனைத்து போ.
கரை பெற்ற இன்பம்
பெறட்டும் நதியும்..!
---------------------------------------

நீர் வட்டமிடும்
சுழல் பார்த்திருக்கிறேன்.
உனை வட்டமிடும்
நதியை
என்னவென்று சொல்ல.??
-----------------------------------------

நதி பார்க்க செல்லாதே நீ.!
உன்னை பின்தொடர்ந்து
நிலம் பாய்ந்திட கூடும் நதி..!!

-பிரபாகரன்.

எழுதியவர் : Prabakaran (12-Jun-14, 2:45 am)
பார்வை : 124

மேலே