நீயாநானா

பூமத்திய ரேகையின்
நீளம் குறைந்தாலும்
ஆயுள் ரேகையின்
நீளம் அதிகரித்துத்தான்
போகிறது!
வாழ்விற்கும்
சாவிற்குமிடையே
சரித்திரம் படைக்கவில்லை
என்றாலும்
சறுக்கல்கள்
எட்டிப்பார்க்கத்தான்
செய்கிறது!

எண்சாண் உடம்பிற்குள்
எகத்தாள முழக்கங்கள்!
கற்பனைக் குதிரையைக்
காற்றில் பறக்கவிட்டு
செவிடாகிப் போன
வெண்ணிலவுக்கு தாலாட்டு!
போகாத ஊருக்கு
வழி தேடிவோர்
சேற்றில் கால்வைக்க
சேணம் கட்டா
குதிரைபோல்
உதறல்கள்!

துருப்பிடிக்கும் செல்லாக்காசும்
எடைக்குப் போகும்!
புழுத்துப் போகும்
உப்புபண்டமும்
உணவாய் போகும்!
மானிடனாய் பிறந்தாலும்
அழகான மேனியும்
ஆழிக்குள் போனாலும்
அழுகித்தான் போகும்!

அன்பை வாரிக்கொடுத்தும்
வாங்குவாருமில்லை
இறைஞ்சிக் கேட்டும்
அள்ளிக் கொடுப்பாருமில்லை!
வாழத் துணிந்தவர்களை
வாழ்விப்பாருமில்லை!
உழைக்கத் தெரிந்தவரை
தூக்கிவிடுவாருமில்லை!
துணிவுள்ளவரை
ஒருகை பார்க்கலாம்
வாழ்க்கையை!
நீயா?நானா?

....................சஹானா தாஸ்!

எழுதியவர் : சஹானா தாஸ் (12-Jun-14, 11:02 am)
பார்வை : 121

மேலே