சுவர்கம்
நீண்ட இடைவெளி
நீளும் கனவுகள்
பச்சை போர்த்திய என் கிராமம்
சுற்றி தென்படும் மலைகள்
வீட்டிற்கு தெரியாமல் அருவியில் குளியல்
ஆற்று நீர் அடித்து சென்ற என் நண்பன்
காப்பற்றுகையில் மூர்ச்சையான நான்
அதிகாலை வானத்தை
ஆக்கிரமிக்கும் பறவைகள்
வெந்நீரில் அவசரம் அற்ற குளியல்
தலை துவட்டும் போது
என்னடா தலை இது அழுக்கு பிடித்தவனே
என சண்டையிடும் பாட்டி
டேய் ஆறிடபோகுது
குளியலுக்கு முன்பே காத்திருக்கும்
உணவு மற்றும் என் தாய்
துரை எங்க போகுது
முறை வாசல் தாண்டுகையில்
முறைத்தபடி மாட்டை பார்த்து
என்னை கேட்கும் அப்பா
மட்டை ஒன்றை தூக்கியபடி
மாரியப்பன் வீட்டிற்க்கு
கதாயுதம் ஏந்தி போகும்
போர்வீரன் போல்
பெண்களின் முன் பெருமிதமாய் நடை
ஆடி ஆடி களைத்த பின்னே
வரும் வீட்டு பயம்
அடி வாங்க துணிந்து வீட்டில்
அடிவைத்த அந்த நாட்கள்
ம்ம்ம் .....................
நகர வேலை
இல்லை இல்லை
நரக வேலை தரும் சில நாள்
விடுப்பில்
சுவர்கம் காணும் கனவுகளோடு
நகரும் நானும் சுமக்கும் பேருந்தும்