ஐ போன் அழகிகள்

ஐ போன் அழகிகள்!
ஆண்ட்ராய்ட் குமரிகள் !
அசத்திடும் ஆப்ஸ்களில்
கேங் ஆனேனே!

இரு விழி
ஸ்கேனிங்கில் இமை
முட்டும் கேமிங்கில்
நான் தொலைந்தேனே!

கலர்கலர் கவிதைகள் !
காஷ்ட்யூம் டிசைனில்
கலக்கிடும் பொழுதுகள்
ஹைக்கூ கலவரமே!

இருவிழி இறுக்கிடும்
ரேபான் இமைகளும்!
ப்ய்ர்சிங் பிதுங்கிடும்
ஸ்ட்ராபெர்ரி இதழ்களும்!
இடைகளில் சினுங்கிடும்
லீவிஸ் ஜீன்ஸ்களும்!
ராப்களில் சுழலும்
இசைத்தட்டு உலகும்!
ஐயோ இழுத்திடுதே
என்னை சிதைத்திடுதே....

ஸ்டேட்டஸ் கொஞ்சம்
வெறுத்திடும் போதும்!
டுவீட்டுகள் கொஞ்சம்
கடித்திடும் போதும்!
யூட்யுப் பக்கம்
புளுங்கிடும் போதும்
வாட்ஸ்அப் விரல்கள்
நம்மை வளைத்திடுமே
இம்கூம் வளைத்திடுமே....

ரிங்டோன் சத்தம்
எகிறிடும் போதும்!
ஹார்லி ஹாரன்
கதறிடம் போதும்!
லிப்ஸ்டிக் முத்தம்
இசைத்திடும் போதும்!
வைபரேட் நெஞ்சம்
துடிக்கிறதே அய்யோ!!
துடிக்கறதே! இம்கூம் கூம் கூகூம்...

டேட்டிங் டேய்சும்
வாலெட் கேசும்
உருகிடும் பொழுதில்
உணர்ந்தேன்! ஸ்டேட்ஸ்
இறங்கி இப்போ
ஈ.சி.ஆர் ஆயச்சோ...
நம்ம ஈ.சி.ஆர் ஆயச்சோ....


(நண்பரின் தூண்டுதலுக்காக இந்த ராக் மக்கள் கோபம் கொள்ள வேண்டாம்)

எழுதியவர் : சுபகூரிமகேஸ்வரன் (எ) skmaheshwaran (13-Jun-14, 12:45 pm)
பார்வை : 126

சிறந்த கவிதைகள்

மேலே