மழைக்காக ஒரு கண்ணீர் மழை

மழைக்காக ஒரு கண்ணீர் மழை

பூமியின் அழு குரல்
கேட்டும் ..
சந்தோசமாய் இருக்கிறது மேகங்கள் ..

வண்ண மீன்கள் விளையாடிய
குளங்கள் எல்லாம் ..
கருவாட்டு சந்தையாகிவிட்டது

நிலம் பார்க்கும் நிலவும் கூட
முகம் சுழித்து நிற்கிறது ..
வெறும் தரையில்
என் அழகை எப்படி அறியேன் என்று..

பூக்கள் மட்டும் அல்ல அதன் வேர்களும்
கருகும் வாசம் தான் வருகிறது ..
வறட்சியில்...

மரங்களில் வெறும் கிளைகளும் ..
தரையினில் இலைசருகுகளுமாய்
கிடக்கிறது ...

மண்ணும் மக்களும் ..மங்கிதான்
இருக்கின்றன..

உடல் ஒட்டிய உயிர் தொலையும் முன்
மண் சேருமா அந்த மழை ...

எழுதியவர் : kumஆர்ஸ் (13-Jun-14, 11:52 pm)
பார்வை : 159

மேலே