மாதவிடாய் முடிந்து தலை முழுகிய பின் பன்னிரண்டு நாள் - ஆசாரக் கோவை 42

தீண்டாநாள் முந்நாளும் நோக்கார்நீ ராடியபின்
ஈராறு நாளும் இகவற்க என்பதே
பேரறி வாளர் துணிவு. 42 ஆசாரக் கோவை

பொருளுரை:

தம் மனைவியர்க்குப் பூப்பு நிகழ்ந்து உடல் தீண்டத் தகாத மாதவிடாய் மூன்று நாட்களிலும் கணவர் அவரைப் பாராமலும் உடல் அளவில் தீண்டாமலும் இருக்க வேண்டும்.

மாதவிடாய்க்கு முடிந்து தலைமுழுகிய பின் பன்னிரண்டு நாள் அளவு மனைவியை விட்டு அகலாமல் இருந்து ஒன்றிணைந்திருக்க வேண்டும் என்பது அறிவுடைய ஆராய்ச்சியாளர் கொள்கை எனப்படுகிறது.

அந்தப் பன்னிரண்டு நாட்களில் கருத்தரிக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவ அளவிலும் சொல்லப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jun-14, 9:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 218

சிறந்த கட்டுரைகள்

மேலே