முதியோர் இல்லம் எதற்கு

கண்ணிலே நீர் எதற்கு?
கை இல்லையா துடைப்பதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு?
நீ அன்பாய் இருப்பதற்கு
பாசமென்ற சொல் எதற்கு?
அன்பாலே இணைவதற்கு
பிள்ளைகளும் உடனிருக்கு
பெற்றோர்க்கு துயரெதற்கு?
தனித்திருத்தல் இனிஎதற்கு
தாங்கி நிற்க உறவிருக்கு
ஒதுக்குவதாய் நினைப்பதற்கு?
உறவுகளாம் துணைஇருக்கு
முதியோர்க்கு வீடிருக்கு
முதியோர் இல்லம் எதற்கு...?