அப்பா ஓர் ரதம்

அப்பா
======
நாம் குழந்தையாக இருந்த போதே
தன் முதுகை நமக்கு சிம்மாசனமாக்கி
தன் கைகளையும் கால் களையும்
நான்கு சக்கரமாக வடிவமைத்தார்
அப்பா.

அப்பா
======
தன் முயற்சிகளால்
நம் வாழ்கை பயணத்துக்கு
நம்மை ஏற்றி புறப்பட்ட
அந்த பாசமிகு அற்புத ரதம்
அப்பா.

அப்பா
======
இறுதிவரை நம்மை சுமப்பதில்
மகிழ்சி பெறுகின்றார்
அப்பா.

குறிப்பு : படத்தில் இருப்பவர்
என் பாசமிகு அற்புத ரதம்

எழுதியவர் : பா இளங்கோவன் (15-Jun-14, 10:27 am)
Tanglish : appa or ratham
பார்வை : 145

மேலே