சிகரெட்
உன்னைவிட
என் உதட்டோடு
உறவாடியவள்
எவளும் இல்லை.....
»»»»»
எங்கும் எப்போதும்
கூச்சமின்றி
என் இதழ் கவ்வி ்
சல்லாபிக்கும்
நாயகி இவள் மட்டுமே...
»»»»»»
என் எழுது கோலைவிடவும்
என் கரத்தின் புரத்தே
அதிகம் தவழ்ந்து
ஆதிக்கம் செய்யும்
கணிகை இவளே......
»»»»»»»
சோகம் எனினும்
கீதம் எனினும்
சிந்தையிலும் விந்தையாய்
வியாபித்து விளையாடுபவள்
இவளே....
»»»»»»»
இவள் கட்டியவள் அல்ல
ஒட்டியவள்
ஆம்!இதழோடு ஒட்டியவள்
மயக்கி மனதை
மண்டியிட செய்தவள்...
»»»»»»
வேண்டாம் என்று
ஊதித் தள்ளினாலும்
உதறித் தள்ளினாலும்
எனை சுற்றி வட்டமிடும்
சதிகாரி
»»»»»»
பிடித்தால் விடாத
பிடாரி அவள்
சுவாசத்தினூடே
நுரையீரல் வழி சென்று
இதயக் கூட்டை
சிதைக்கும் எம்டன் மகளவள்
»»»»»»
விட்டு ஒழித்து விட
விவாகரத்து கேட்டாலும்
விலை மாது போல்
சுற்றி சுற்றி வந்து
சுகம் கொடுக்க முனைகின்றாள்
»»»»»»»
சிந்திக்க அழைத்த என்னை
சிதை அழிக்கப் பார்க்கின்றாள்
சோகம் ஆற்ற அழைத்தவள் தான்
என் சுகம் அழித்து சிரிக்கின்றாள்
நான் என் செய்வேன்...!
»»»»»»»
கேடென்று சொல்லும் அரசு
கடைதனில் விற்க
தடை செய்யக் கூடாதா?
உடல் நலம் பேண
அவளை அழித்தொழிக்க கூடாதா?
»»»»»»»
உயிர் குடிக்கும் காட்டேரி
விட்டுத் தான் போயேன்டி
உதட்டோடு சேர்த்து
உயிரையும் தான்
உறிஞ்சுகின்றாய்
»»»»»»
புலம்ப வைத்து புற்று வைத்து
சேர்த்து வைத்த
சொத்து சுகம் விற்க வைத்து
மரணத்தை பரிசளித்து
எனை மாய வைத்தே
நீ ஓய்வாயா?

